Anna University Students Requested To Cancel The Exams

0
Anna University Students Requested To Cancel The Exams

Anna University Students Requested To Cancel The Exams

This Is Viral WhatsApp message

BE மாணவர்களே,

நாம் தேர்வு எழுத ஆரம்பித்து , 1 தேர்வு தான் எழுதி இருக்கிறோம்.. கன மழையின் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வரு கின்றன. இந்நிலையில் சென்னை மற்றும் கடலூரில் உள்ள மாணவர்களின் நிலையை சற்று சிந்தித்து பாருங்கள்.. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பொருள்களை இழந்து தவிக்கும் மாணவர்களால் தேர்வுக்கு படிக்க இயலுமா??.. மழை வெள்ளத்தில் புத்தகங்களையும் Hall ticket- யும் இழந்து தவிப்பது எத்தனை பேர்??.. தனது வீடும் பெற்றோர்களும் இருக்கும் நிலையில் அவர்களால் முழுமையாக கவனம் செலுத்தி படிக்க இயலுமா??..
நமது தோழர் தோழிகளுக்காக குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை அல்லவா??.. இயற்கைச் சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் இவ்வேளையில் தேர்வு அவசியமானதா??..
தேர்வு ஆணையமே ! மாணவர்களின் மன நிலையை சற்று புரிந்து கொள்.. மழை நீடிக்கும் என வானிலை அறிக்கையை நீ கவனிக்கவில்லையா?? இனி வரும் தேர்வுகளையும் ஒத்திவைக்கப் போகிறாயா?? இவ்வாறே ஒத்திவைத்துக் கொண்டிருந்தால் அடுத்த semester-ஐ எப்பொழுது தொடங்கப் போகிறாய்?? அடுத்த semester-ல் Election வருவதை மறந்து விட்டாயா?? அப்பொழுது எங்கள் நிலை என்னவாகும் என சற்றும் சிந்திக்கவில்லையா ??
சென்னையில் உள்ள மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு தேர்வுகளை ரத்து செய்..
தேர்வுகளை புரக்கனிப்பது எங்கள் நோக்கமல்ல.. ஆனால் எங்களின் மன நிலையைப் புரிந்து கொள்.. தேர்வுகளை ரத்து செய். அனைவருக்கும் சராசரி Grade அளித்து தேர்ச்சியளித்துவிடு… நாங்கள் அடுத்த semester படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

சென்னை மாணவர்களே குரல் கொடுங்கள்
தோள் கொடுக்க நாங்கள் இருக்கிறோம்..